தாயின் கல்லறை அருகில் அடக்கம் செய்யப்பட்டது ஜார்ஜ் ப்ளாய்டின் உடல்!

10 June 2020 அரசியல்
gfloydfuneral.jpg

அமெரிக்காவில் போலீசார் தாக்குதலில் உயிரிழந்த ஜார்ஜ் ப்ளாய்டின் உடலானது, அவருடைய தாயின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக, அமெரிக்காவில் பல லட்சம் கருப்பின மக்களின் போராட்டத்திற்கு காரணமாக அமைந்தது 46 வயதுடைய ஜார்ஜ் ப்ளாய்டின் மரணம். போலீசாரின் காலுக்கு அடியில் அவருடைய கழுத்து இருந்த வீடியோவானது, உலகளவில் வைரலானது. தன்னால் மூச்சுவிட முடியவில்லை என அவர் கூறியது தான் கடைசியாக வந்த வீடியோ ஆதாரம்.

அதற்கு அடுத்து, அவர் இறந்த செய்தி மட்டுமே அவருடைய குடும்பத்தாருக்குக் கிடைத்தது. இந்த சூழ்நிலையில், தொடர்ந்து அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் இவ்வாறு துன்பத்து ஆளாகின்றனர் என, பல லட்சம் கருப்பின மக்கள் போராட ஆரம்பித்தனர். அவர்களை சமரசம் செய்ய, பல முயற்சிகளை அமெரிக்க அரசாங்கம் செய்த போதிலும், அவை எதுவும் பலனளிக்கவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்று ஜார்ஜ் ப்ளாய்டின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருடைய தாயின் கல்லறைக்கு அருகிலேயே, அவருடைய உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல ஆயிரம் பேர், அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில், ப்ளாயிடின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. பலரும் கண்ணீர் மல்க, அவருக்கு பிரியாவிடை அளித்தனர்.

HOT NEWS