சீனாவிடம் இழப்பீடு கேட்கும் ஜெர்மனி! கதறும் சீனா! பிடி இறுகுகிறது!

21 April 2020 அரசியல்
angelamerkel12.jpg

ஜெர்மனியில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக, சீனா அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் என, ஜெர்மனி அரசாங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து, உலகம் முழுக்க பரவி இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக ஜெர்மனியில் 1,47,065 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பாதிப்பில் இருந்து, 84,717 பேர் குணமடைந்து மீண்டு உள்ளனர். இந்த வைரஸால் 4,862 பேர் மரணமடைந்து உள்ளனர். இந்த வைரஸால், ஊரடங்கு உத்தரவினை ஜெர்மனி அரசாங்கமும் பின்பற்றி வருகின்றது.

இதனால், அந்நாடின் வருவாய் கணிசமாகக் குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக கொரோனா வைரஸையும், அதனைப் பரப்பியுள்ள சீனாவினையும் தான், அந்த நாட்டு அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு இழப்பீடாக சுமார் 149 பில்லியன் யூரோவினை வழங்க வேண்டும் என, சீன அரசாங்கத்திற்கு ஜெர்மனி நாடானது, நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏற்கனவே, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள், சீனா தான் இந்த வைரஸை வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பி உள்ளது எனக் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு மறுப்புத் தெரிவித்து சீன அரசாங்கம் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

அதில், வெறுப்பு அரசியல் காரணமாக, சீன அரசாங்கத்தின் மீது, ஜெர்மனி அரசாங்கம் பழி சுமத்துகின்றது. உலகம் முழுவதும் பரவியிருக்கின்ற ஒரு தொற்று நோய்க்கு, ஒரு குறிப்பிட்ட நாட்டினை மட்டும் குறைக் கூறுவதும், அபாண்டமாக பழிசுமத்துவதும் நல்லதல்ல என்றுக் கூறியுள்ளது.

HOT NEWS