ஜெர்மனியில் அதிரடி! மருத்துவர்கள், நிர்வாணப் போராட்டம்!

29 April 2020 அரசியல்
germanydoctors.jpg

ஜெர்மனியில் வேலை செய்து வருகின்ற மருத்துவர்கள், தற்பொழுது நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடைகளும் விதிக்கப்பட்டு உள்ளன. ஜெர்மனியில் இந்த வைரஸால் 1,60,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 1,10,000 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 6,314 பேர் துரதிர்ஷ்டவசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், அங்குள்ள மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த மருத்துவர்கள், தங்களுக்கு போதுமான உபகரணங்கள் தரவில்லை எனவும், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் தங்களை மதிக்கவில்லை எனவும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் குற்றம் சாட்டி வந்தனர்.

இதனை அரசு மதிக்கவில்லை என்றக் காரணத்தினைக் கூறி, தங்கள் உடைகளைக் கழற்றி வைத்து நூதனமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கூறுகையில், போதுமான பாதுகாப்பு இல்லாமல், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது, நிர்வாணமாக சிகிச்சை அளிப்பதற்கு சமம் என்பதை உணர்த்தவே, இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.

HOT NEWS