ஜெர்மனி நிதியமைச்சர் தற்கொலை! கொரோனா தான் காரணமா?

31 March 2020 அரசியல்
thomasschaefer.jpg

ஜெர்மனி நாட்டினைச் சேர்ந்த நிதியமைச்சர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆசிய நாடுகளைக் காட்டிலும், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளே அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஜெர்மனி நாட்டின் ஹிஸ்ஸே மாகாணத்தின் நிதியமைச்சராகப் பதவி வகித்து வந்த தாமஸ் ஸ்காப்ர் தற்கொலை செய்து கொண்டார்.

இவருடைய உடலினை, ரயில் தண்டவாளத்தில் கண்டெடுத்தப் போலீசார் இவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் எனக் கூறுகின்றனர். இவருக்கு மக்கள் மத்திய நல்ல பெயர் நிலவி வந்துள்ளது. ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலின் கட்சியினைச் சேர்ந்த இவர், கொரோனா வைரஸ் குறித்து அதிகம் கவலை அடைந்ததாகக் கூறப்படுகின்றது.

இதனால், நாட்டின் பொருளாதாரம் குறித்துக் கவலைப் பட்டதாகவும், அதன் விளைவாகப் பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாகவும் அந்நாட்டின் செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

HOT NEWS