ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முனிசிபாலிட்டித் தேர்தலில், முதல்வர் சந்திரசேகரராவ்வின் கட்சியானது வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், பாஜக தற்பொழுது 2வது இடத்தினைப் பிடித்துள்ளது.
மொத்தம் 150 உறுப்பினர்கள் கொண்ட ஹைதராபாத் முனிசிபாலிட்டி தேர்தலானது, நடைபெற்று முடிந்தது. அதன் வாக்குகளானது, நேற்று எண்ணப்பட்டது. அதில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சியானது 55 வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம், வெறும் 4 இடங்களில் மட்டும் கையில் வைத்திருந்த பாஜகவோ, தற்பொழுது 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே போல், அசாடுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியானது, 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த முறை 60 இடங்களில் வென்றிருந்த அந்தக் கட்சியானது தற்பொழுது 51 இடங்களில் போட்டியிட்டு 44 இடங்களில் வென்றுள்ளது. 2016ம் ஆண்டு 2 இடங்களில் வெற்றி பெற்று இருந்த காங்கிரஸ் கட்சியானது, தற்பொழுதும் அதே போன்று 2 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.