உத்திரப் பிரதேச மாநிலத்தில், நாளுக்கு நாள் பாலியல் குற்றங்களும், அதனைக் காப்பாற்றுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
சமீபத்தில் தான், ஹத்ராஸ் பகுதியில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவருடைய உடலைப் பெற்ற போலீசார், அதனை இரவோடு இரவாக எரித்து விட்டனர். இந்த சம்பவம் அடங்குவதற்குள், மற்றொரு சம்பவம் இதே போன்று நடைபெற்று உள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்ச்சர் பகுதியில் வசித்து வருகின்ற 15 வயதுடைய சிறுமியினை, அப்பகுதியில் வசித்து வருகின்ற ஹரீஷ் என்பவர் கற்பழித்தார்.
அச்சிறுமியின் பெற்றோர் அளித்தப் புகாரின் அடிப்படையில், பழத் தோட்டத்தில் வேலை செய்து வந்த ஹரீஷை போலீசார் கைது செய்தனர். இதனால், ஆத்திரமடைந்த ஹரீஷின் உறவினர்கள் ஐந்து பேர், அச்சிறுமியின் வீட்டிற்குச் சென்றனர். அப்பொழுது, அச்சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லை. அச்சிறுமியினை மிரட்டிய ஹரீஷின் உறவினர்கள், வழக்கினைத் திரும்பப் பெறும் படி அச்சுறுத்தியுள்ளனர்.
ஆனால், வழக்கினைத் திரும்பப் பெற முடியாது என்று அந்த சிறுமிக் கூறியதால், கையுடன் கொண்டு வந்திருந்த பெட்ரோலினை ஊற்றி, தீயினைப் பற்ற வைத்தனர். அதில், அச்சிறுமியின் உடல் முழுவதும் தீ பற்றியது. அச்சிறுமியின் அலறல் சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், அச்சிறுமியினை மீட்டு, அருகில் இருந்து மருத்துவமனையில் சேர்த்தனர். அதில், அச்சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம், இந்திய அளவில் அதிர்வலையினை தற்பொழுது ஏற்படுத்தி வருகின்றது.