பாலியல் புகாரை ஏற்க மறுத்த போலீஸ்! நாக்பூர் சென்று புகாரளித்த பெண்! உபியில் துயரம்!

07 October 2020 அரசியல்
rape.jpg

உத்திரப் பிரதேசத்தில் தான் கொடுத்தப் பாலியல் வழக்கினை போலீசார் ஏற்க மறுத்ததால், மஹாராஷ்டிராவிற்கு சென்று பெண் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவினைச் சேர்ந்தவர் பிரவீன் யாதவ். இவர் அப்பகுதியில் செல்வாக்கு மிகுந்தவர். அவருக்கும் நேபாளத்தில் இருந்து இங்கு பிழைப்பிற்காக வந்த பெண்ணிற்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. பல முறை நேபாளப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்து வந்த பிரவீன், அவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை எடுத்துள்ளார். மேலும், பண உதவி செய்வதாகவும் கூறியிருக்கின்றார்.

அதை நம்பி, அந்தப் பெண்ணும் பலமுறை தன்னை வழங்கியிருக்கின்றார். ஆனால், கொரோனா காரணமாக ஊரடங்கு சமயத்தில் அந்த நேபாளப் பெண் உதவிக் கேட்டுள்ளார். ஆனால், பிரவீன் யாதவ் எவ்வித உதவியும் வழங்கவில்லை. மேலும், தான் எடுத்த வீடியோக்களைக் காட்டி மிரட்டியுள்ளார். இதனால், அந்தப் பெண் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், பிரவீன் யாதவின் செல்வாக்கின் காரணமாக, அவர் மீது போலீசார் புகார் பதிவு செய்யவில்லை.

இதனைத் தொடர்ந்து, பிரவீன் யாதவ் தன்னுடைய நண்பர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அங்கிருந்து அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களை அவர் வெளியிட்டு உள்ளார். தனக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளதை உணர்ந்த அந்தப் பெண், நாக்பூர் சென்றுள்ளார். சுமார் 900 கிலோமீட்டர் பயணம் செய்து அங்குள்ள காவல்நிலையம் சென்றுள்ளார். அங்கு தன்னை பிரவீன் யாதவ் ஏமாற்றி விட்டதாக தெரிவித்து உள்ளார்.

இதனை விசாரித்த போலீஸ் அதிகாரிகள், அந்த வழக்கினைப் பதிவு செய்து, பின்னர் அதனை லக்னோவிற்கு மாற்றியுள்ளனர். இது குறித்து அந்தப் பெண் கூறுகையில், தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் கணவர் ஆகியோர் இந்த வீடியோவினைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, என்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் இதனை வெளியிட்டு உள்ளார் பிரவீன். அத்துடன் நான் அதனை நீக்காமல் இருக்க, அந்த கணக்கின் பாஸ்வேர்ட்டினை மாற்றியும் உள்ளார் என்றுக் கதறியுள்ளார்.

HOT NEWS