மோடிக்கு விருது கொடுத்த பில்கேட்ஸ்! தூய்மை இந்தியா திட்டத்திற்காக விருது!

25 September 2019 அரசியல்
modiglobalgoalkeeper.jpg

அமெரிக்காவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் மோடிக்கு, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அதிபரும், உலகின் முதல் நிலைப் பணக்காரருமான பில்கேட்ஸ், விருது வழங்கி கௌரவப்படுத்தினார்.

கடந்த 2014ம் ஆண்டு, அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாள் அன்று, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சுகாதாரத் திட்டப் பணிகளில் ஈடுப்பட்டது இந்தியா. வெளிப்புறக் கழிப்பிடத்தை மாற்றி, கழிவறை கட்டிக் கொடுத்தும் அசத்தியது. மேலும், பிட் இந்தியா திட்டத்தின் மூலம், உடல் உறுதி மற்றும் உடல் பாதுகாப்பு குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக, இதனை வெற்றிகரமாகச் செய்த, பிரதமர் மோடிக்கு, நியூயார்க் நகரில், பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில், குளோபல் கோல்கீப்பர் என்ற விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அப்பொழுது, பேசிய பிரதமர் மோடி, இந்த விருதினை இந்திய மக்கள் அனைவருக்கும் சமர்பிப்பதாக கூறினார்.

HOT NEWS