இது இசைச் சரித்திரத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கருப்புப் பக்கமாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஆம், இப்பாடலில் அவ்வளவு சோகங்கள் மற்றும் இதனைக் கேட்பவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டப் பல திடுக்கிடும் சம்பவங்கள் இதனை இவ்வாறு அழைக்க காரணமாக உள்ளது.
இப்பாடலை 1932ல் ரீசோ சீரீஸ்ஸ் எனும் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த பாடலாசிரியர் இப்பாடலை இயற்றியுள்ளார். இவர் முதலில் எழுதியப் பாடல்கள் பிரபலமடையவில்லை. இதனால், இவரது மனைவி இவரை வேற வேலைக்குச் செல்ல வற்புறுத்தியுள்ளார். இதனால் மிகவும் சோகமடைந்த ரீசோ ஞாயிறு காலையில் இப்பாடலை எழுத ஆரம்பித்துள்ளார். சரியாக அரை மணி நேரத்தில் இப்பாடலை எழுதியுள்ளார். பின்னர் இப்பாடலை பல நிறுவனங்களுக்கு அனுப்பினார். பலர் நிராகரித்தனர். இறுதியாக ஒரு கம்பெனி இதனை ஏற்றுக் கொண்டு வெளியிட்டது.
மர்மமான மரணங்கள்இப்பாடலைக் கேட்டப் பலர் தன் உயிரை மாய்த்துக் கொண்டனர். எனக் கூறினால், நம்ப முடிகிறதா? ஆம், பல்லாயிரம் பேர் இப்பாடலால் தற்கொலைச் செய்து கொண்டனர். முதலில் பெர்லினில் ஒரு இளைஞன் சிறப்பாக ஒரு இசைக் கச்சேரியை நடத்தினார். அதில் இப்பாடலைப் அக்குழுவினர் பாடினர். பின்னர் ஒரு வாரத்தில் அந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டான். பின்னர் பலரின் தற்கொலைக்குக் காரணமான இப்பாடலை உலகப்புகழ் பெற்ற BBC நிறுவனம் 1936 முதல் 2002 வரை தன்னுடைய வானொலியில் ஒளிபரப்ப தடை விதித்தது. இதில் உச்சகட்ட சோகமாக இப்பாடலை இயற்றியவரின் முதல் மனைவி இப்பாடலைக் கேட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தன் வாழ்வில் மிகப்பெரிய தவறைப் புரிந்துவிட்டதாக இப்பாடலை இயற்றியவர் மனம் வருந்தியுள்ளார்.
இப்பாடல் வரிகள் மிகவும் சோகம் நிறைந்தவையாகவும், கேட்டவுடன் அழ வைக்கும் வகையில் இருப்பதாகவும் இப்பாடல் வரிகளைப் புரிந்து கொண்டவர்கள் கூறுகின்றனர். ஹிட்லரின் ஆதிக்கத்தால் உலகில் இப்பாடல் மறக்கப்பட்டாலும் இன்றும் இது இணையத்தில் கிடைக்கிறது என்றால் கவலை நிறைந்த அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும்.