அரவிந்த் சாமி, இளையராஜாவிற்கு விருது! சர்வதேச திரைப்பட விழா நிறைவடைந்தது!

29 November 2019 சினிமா
ilayarajaaward.jpg

pic credit:twitter.com/IFFIGoa

சர்வதேச திரைப்பட விழாவானது, கோவாவில் நேற்றுடன் முடிவடைந்தது. கோவாவில், கடந்த வாரம் ஆரம்பித்த இந்த விழாவில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதனையடுத்து, பல திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டன. இந்நிலையில், நேற்று 50வது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக நிறைவு பெற்றது.

நிறைவு நாளான நேற்று, தெலுங்கு நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தணா கலந்து கொண்டனர். மேலும், பலத் திரை நட்சத்திரங்கள் இந்த இறுதி நாள் விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா, நடன இயக்குநர் பண்டிட் பிர்ஜூ மகாராஜ் மற்றும் நடிகர் அரவிந்த் சாமி ஆகியோருக்கு, அவர்களுடைய சேவையைப் பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

HOT NEWS