கொரோனா எப்பொழுது ஒழியும் கடவுளுக்கே தெரியும்! முதல்வர் பேட்டி!

20 June 2020 அரசியல்
epscm.jpg

கொரோனா வைரஸ் எப்பொழுது ஒழியும் என கடவுளுக்கு மட்டுமேத் தெரியும் என்று, முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

தற்பொழுது சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவானது கடுமையாக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, காலையில் செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி. அவர் பேசுகையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் அளவானது 54 சதவிகிதமாக உள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கவே ஊரடங்கானது தீவிரமாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தான் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றுக் கேட்டுக் கொண்டார். சென்னையில் தற்பொழுது 527 முகாம்கள் பயன்படுத்தப்பட்டு 30,000 அதிகமானோரிடம் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. 900 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த வைரஸ் ஆனது, புதிரான மற்றும் புதிய நோய் ஆகும். இது எப்பொழுது சரியாகும் என்பது, கடவுளுக்கு மட்டுமே தெரியும் என்றும், சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லாமல் இங்கேயே இருந்தால் தான், பரிசோதனைகளை வேகமாகச் செய்ய இயலும் என்றும் கூறியுள்ளார்.

HOT NEWS