நிறுத்தப்பட்டது காட்மேன் வெப்சீரிஸ்! இயக்குநர், தயாரிப்பாளர் மீது வழக்கு!

02 June 2020 அரசியல்
godman.jpg

தற்பொழுது இந்தியா முழுவதும், இணையத்தில் வெளியாகும் படங்களும், சீரிஸ்களும் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. அந்த வரிசையில், தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ள வெப்சீரிஸ் என்றால், அது காட்மேன் வெப்சீரிஸ்.

ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சொந்தமான ஜீ5 எனும் வலைதளத்தில், இந்த சீரிஸ் வெளியாக திட்டமிடப்பட்டது. இதற்கான டீசரும் இணையத்தில் வெளியானது. இதற்கு இந்து மதத்தினர் மத்தியல் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்து மதம் சார்ந்த கட்சிகள், பாஜக உள்ளிட்டப் பெரும் கட்சிகளும் இந்த சீரிஸிற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில், சுப்பிமணிய சுவாமியின் சங்கமான விராட் ஹிந்துஸ்தான் அமைப்பினர் இது குறித்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாகியான சுபாஷ் சந்திராவிடம் இந்த தொடரை நிறுத்த கூறினர். தொடர்ந்து, பலரும் இந்த தொடரினை நிறுத்தும் படி, எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பிராமணர்களையும், இந்து மதத்தினரையும் இழிவுபடுத்துவதாக இந்த நாடகம் உள்ளதாக புகார் தெரிவித்தனர்.

இதனை ஏற்று, இந்த சீரிஸ் தற்பொழுது நிறுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி, இந்தி சீரிஸின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. ஜூன் 12ம் தேதி இந்த சீரிஸ் ஒளிபரப்பாக உள்ளதாக, விளம்பரம் செய்யப்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த சீரிஸின் இயக்குநர் பாபு யோகேஷ்வரன் மற்றும் தயாரிப்பாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் மீது, ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நாடகத்தில், டேனியல் பாலாஜி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS