இயற்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. பல ராட்சத மிருகங்கள் புவியில் இருப்பதை அழிக்க வருகின்றன. அவைகளை வெல்வதற்கு, ஒரு மிருகத்தால் மட்டுமே முடியும். இதனை விஞ்ஞானிகள் முடிவு செய்கின்றனர். தூங்கிக் கொண்டிருக்கும் காட்சில்லாவை எழுப்புகின்றனர். பின்னர், என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே யோசித்துவிடுவீர்கள்.
ஆதி காலத்தில் கதைகளில் வந்த மிருகங்களை கண்ட மனிதர்கள். நடுங்கிப் போகிறார்கள். மூன்று தலையுள்ள, கிங் கிடோரா போன்ற மிருகங்கள் மனித இனத்தை அழிக்க வருகின்றன. இந்நிலையில், இவைகளை அடக்கி வெல்ல காட்சில்லா வருகின்றது. சென்ற பாகத்தைப் போலவே, இந்தப் பாகத்திலும், சென்டிமென்ட்களைப் பயன்படுத்தி உள்ளனர்.
பொதுவாக, மனித இனத்தைக் காக்க அமெரிக்கர்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றனர் என்பதை, இந்தப் படத்திலும் காட்டாமல் இல்லை. இந்த மாதிரியானப் படங்களைப் பார்த்துப் பார்த்து தமிழ் மக்களுக்கே சலித்து இருக்கும். இந்த நிலையில், அமெரிக்காவில் வாழும் மக்களுக்கு, சொல்லவா வேண்டும்.
படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் மிக அருமை என்று கூறலாம். அந்த அளவிற்கு மிக நேர்த்தியாக செதுக்கியுள்ளனர். ஒவ்வொரு கதாப்பாத்திரமும், கனக்கச்சிதமாக தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி உள்ளனர். எப்படி இருந்தாலும், இந்தப் படத்தைப் பார்த்தால், நமக்கே வெறுப்பாகும் அளவிற்கு, அழுகப் பழையக் கதை. குழந்தைகளுக்காக வேண்டும் என்றால், ஒரு முறை திரையறங்கத்திற்கு அழைத்துச் சென்று பார்க்கலாம்.