தங்க முலாம் பூசப்பட்ட கோயில் கலசம்! மீண்டும் கோயிலில் பொருத்தப்ப்பட்டது!

30 January 2020 அரசியல்
kalasam.jpg

தஞ்சை ஆவுடையார் கோயில் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு, கோயில் கலசத்திற்கு தங்க முலாம் பூசும் பணி நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து, பூஜைகளுக்குப் பிறகு, கலசமானது கோயிலில் நிலைநிறுத்தப்பட்டது.

தஞ்சையில் உள்ள ஆவுடையார் கோயிலில், திருக்குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, கோயிலில் பராமரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மராமரத்து பணிகள், வர்ணம் பூசும் பணிகள் என அனைத்துப் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றது. வரும் பிப்ரவரி 5ம் தேதி அன்று, மிகப் பிரம்மாண்டமாக குடமுழுக்க நடத்தப்பட உள்ளது.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சை பெரிய கோயிலில், கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் திருக்குடமுழுக்கு நடைபெற்றது. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற உள்ளதை அடுத்து, பல லட்சம் பேர் இந்த திருக்குட முழுக்கில் கலந்து கொள்வார்கள் என, எதிர்பார்க்கப்படுகின்றது. வருகின்ற பக்தர்களுக்காக, தற்காலிக பேருந்து நிலையம், கழிவறை வசதிகள், கடைகள் மற்றும் மருத்துவ வசதிகள் முதலியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

110 யாக குண்டங்கள், 22 வேதிகைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், கோயிலின் கலசமானது, அகற்றப்பட்டு, நவதானியங்கள் நிரப்பப்பட்டது. பின்னர், அதற்கு தங்க முலாம் பூசப்பட்டது. அதனையடுத்து, கலசத்திற்கு முறையான பூஜைகள் செய்யப்பட்டு பின்னர், கோயிலில் நிலை நிறுத்தப்பட்டது.

HOT NEWS