கீழடியில் தங்க நாணயம் கண்டுபிடிப்பு!

18 June 2020 அரசியல்
keeladigoldcoin.jpg

கீழடியில் தற்பொழுது நடைபெற்று வரும் ஆராய்ச்சியில் புதிதாக ஒரு தங்க நாணயமும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கீழடிப் பகுதியில் தற்பொழுது ஆறாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு பெரிய அளவிலான விலங்கின் எலும்பு, மனித மண்டை ஓடு, சில அணிகலன்கள் முதலியவைக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்த சூழ்நிலையில், அகரம் பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில் புதிதாக தங்க நாணயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

300 மிகி எடையும், ஒரு சென்டிமீட்டர் அளவும் இந்த நாணயமானது, கிபி 17ம் நூற்றாண்டினைச் சேர்ந்ததாக இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. நாணயத்தின் முன் பக்கம் நாமம், சூரியன் மற்றும் சிங்க உருவமும் பொறிக்கப்பட்டு உள்ளது. அதே போல், அதன் பின்பக்கம், 12 புள்ளிகளும் மற்றும் அதன் கீழ் இரண்டு கால், கை உள்ள உருவமும் பொறிக்கப்பட்டு உள்ளன. இது தற்பொழுது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

HOT NEWS