திருச்சியில் கிடைத்த தங்கப் புதையல்!

07 March 2020 அரசியல்
goldtreasuretrichy.jpg

திருச்சியில் உள்ள ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில், தங்கப் புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

திருச்சியின் திருவாணைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில், அகிலாண்டேஸ்வரியின் சன்னதி உள்ளது. அங்கு, பூந்தோட்டம் அமைப்பதற்காக, இரண்டு அடிக்கு குழித் தோண்டப்பட்டது. அதில், ஒரு குடுவைக் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கண்டெடுத்த வேலையாட்கள், கோவில் நிர்வாகத்திற்குத் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அங்கு திருச்சி கலெக்டர் தலைமையில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில், அந்தக் குடுவையில் 500க்கும் அதிகமான தங்கக் காசுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் கருவூலத்திற்கு கொண்டு சென்றனர். இந்த குடுவையில் மொத்தம் 505 தங்க நாணயங்கள் இருந்துள்ளன எனவும், அவைகளின் மொத்த எடையானது, 1,716 கிராம் எனவும் கணக்கிட்டுள்ளனர்.

இந்த தங்க நாணயங்களில், நான்கு வகையானது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், ஒன்று விஷ்ணுவின் உருவத்தினையும், அதன் பின்புறம் ஆங்கிலேயர் குறிப்பும் இருந்துள்ளது. மற்றொரு நாணயத்தில், திரிசூலத்துடன் சிவன் பார்வதியின், பின்புறம் ஹைதர் அலியின் பெயரும் பாரசீக மொழியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

HOT NEWS