உத்திரப்பிரதேசத்தில் அள்ள அள்ள தங்கம்! அதிர வைக்கும் அதியம்!

24 February 2020 அரசியல்
goldtunnel.jpg

உத்திரப் பிரதேசத்தில் தற்பொழுது, மாபெரும் தங்க புதையல் கிடைத்துள்ளது. இதனால், தங்க விலை குறையும் வாய்ப்புகள் உள்ளதாக, தகவல் கிடைத்துள்ளது.

உத்திரப் பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில், சுமார் 3350 டன் எடையுள்ள தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் ஆச்சர்யம் அடைந்து உள்ளனர். இதுவரை, இவ்வளவு அளவுள்ள தங்கமானது, இந்தியாவில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மதிப்பு சுமார் 12 லட்சம் கோடியாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டும் உள்ளது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து கிளம்புவதற்கு, சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தப் பகுதியில் தங்கம் இருக்கலாம் என, ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும், அவர்களுக்கு இந்தத் தங்கம் கிடைக்கவில்லை. பின்னர், 1993ம் ஆண்டு, இந்தப் பகுதியில் தங்கம் இருக்கலாம் என யூகித்த மத்திய அரசின், ஜியோலாசிக்கல் சர்வே ஆப் இந்தியா அமைப்பானது, இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டது.

இந்தப் பகுதியில், 2,943.26 டன் தங்கமும், 646.16 கிலோ தங்கப் பாறையும் இருப்பது தற்பொழுது தெரிய வந்துள்ளது. இதனால், உத்திரப்பிரதேசத்தின் மதிப்பானது, பல மடங்கு கூடியுள்ளது. உலக தங்க நிர்ணயத்தின் படி, இந்தியாவில் தற்பொழுது, 626 டன் தங்கத்திற்கான வயல் இருப்பதாக கூறியுள்ளது. இப்பொழுது கிடைத்துள்ள தங்கமானது, இது கணித்துள்ளதை விட, ஐந்து மடங்கு அதிகமாகும்.

இதனால், இந்தியாவின் பொருளாதாரம் மட்டுமின்றி, தங்கத்தின் விலையும் சிறப்பாக இருக்க உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலையானது, 32,000 ரூபாயினை நெருங்கி வரும் நிலையில், தற்பொழுது தங்க மலையே கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், தங்கத்தின் விலை உடனடியாக குறையாவிட்டாலும், எதிர்காலத்தில் கண்டிப்பாக குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS