30,000 தாண்டிய ஒரு சவரன் தங்கம்! இனியும் தங்கம் வாங்க வேண்டுமா?

03 January 2020 அரசியல்
goldjewelry.jpg

தொடர்ந்து தங்கத்தின் விலையானது, ஏறுமுகமாகவே உள்ளது. தற்பொழுது சென்னையில் ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை, 30,344 ரூபாய்க்கு விற்கப்புகின்றது. இன்று ஒரே நாளில் மட்டும், சவரனுக்கு 488 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் தேவையானது, தொடர்ந்து இந்த அளவிற்கு இருப்பது ஆச்சர்யமான விஷயமாகவே உள்ளது. ஆபரணத் தங்கத்தினை வாங்கவதில் பெண்கள் தங்களுடைய விருபத்தினைக் காட்டி வருகின்றனர். மேலும், இந்தியாவில் தங்க உற்பத்தி இல்லாததால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றனர். இதனால், உலக சந்தையின் நிலைமையினைப் பொறுத்தே, இதன் விலையானது இந்தியாவில் ஏற்ற, இறக்கத்தினை சந்திக்கின்றது.

பெரும்பாலும், நிலம் அல்லது தங்கத்தில் தான், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் பணத்தினை முதலீடு செய்கின்றனர். அவசரத் தேவை என்று பார்த்தால், தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், நிலத்தினை அவ்வாறு அடகு வைத்து உடனடியாக பணம் பெற முடியாது. இதனையும் யோசித்தே, மக்கள் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். தொடர்ந்து முதலீடு அதிகரிப்பதும், இத்தகைய விலைவாசி உயர்வுக்குக் காரணம் ஆகும்.

தற்பொழுது ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 3793 ரூபாயும், 24 காரட் தங்கத்தின் விலை 4,138 ரூபாய்கும் விற்கப்படுகின்றது. சென்னையில் இந்த விலை என்றால், தமிழகத்தின் பிற மாவட்டங்களில், செய் கூலி மற்றும் சேதாரம் என ஒரு சவரன் தங்க நகையானது, 32,000 வரையிலும் விற்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS