GOOGLE SEO ரேங்க் வேணுமா அப்போ இதைச் செய்யுங்க

12 June 2019 தொழில்நுட்பம்
google.jpg

உலகில் உள்ள 55% மக்களால் கூகுள் என்ற தேடுபொறியைப் பயன்படுத்துகின்றனர். பல தேடுப்பொறிகள் உலகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், கூகுள் அளவிற்கு எதையும் யாரும் பயன்படுத்தவில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை அளிக்கும் இலவச சேவைகள் மற்றும் வசதிகளின் காரணமாக, கூகுள் நிறுவனம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

இந்த கம்பெனியில் ஏறத்தாழ 70000க்கும் அதிகமான ஊழியர்கள், உலகின் பல்வேறுப் பகுதிகளில் வேலை செய்கின்றனர். இத்தகையப் பிரம்மாண்டமான கம்பெனியில், செலவுகள் எவ்வளவு என்பதை நீங்களே நினைத்துப் பாருங்கள். உலகின் NO.1 கம்பெனியான கூகுளில் உள்ள சுதந்திரம் மற்ற எந்த ஒரு கம்பெனியிலும் எதிர்ப்பார்க்க கூடாத ஒன்று. இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட இந்தக் கம்பெனி, இன்னும் வெற்றிகரமாக இயங்கி வருகிறதென்றால், அதன் வருவாயை நினைத்துப் பாருங்கள்.

கூகுள் தன்னுடைய பெரும்பாலான சேவைகளை இலவசமாக அளித்தாலும், அதன் தலைவர் லேரி ஃபெய்ஜ் உலகின் தலைசிறந்த செல்வந்தர்களில் ஒருவராக உள்ளார், என்பது அனைவருக்கும் வியப்பளிக்கும் விஷயமாகும். கூகுளின் வருமானமே, அதன் விளம்பரங்களிலிருந்தே சம்பாதிக்கிறது, என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்.

வருமானம்?

கூகுளின் துணைக் கிளையான கூகுள் ஆட்சென்ஸ் மூலமே, கூகுள் நிறுவனம் சம்பாதிக்கிறது. இது ஒரு இடைத்தரகராக, அதாவது விளம்பர ஏஜன்ட்டாக நிறுவனங்களுக்கும் வலைத்தளங்களுக்கும் இடையில், செயல்பட்டு பணம் சம்பாதிக்கிறது. உலகளவில் இந்த சேவையைப் பயன்படுத்துபவர்கள் கோடிக்கும் மேல். மேலும் அரசாங்கத்திற்கு உதவுவதன் மூலமும், கணக்கிட முடியாத அளவில் பணம் சம்பாதிக்கிறது.

நம்மைப் பொறுத்த வரையில், விளம்பரம் என்பது சாதரணமான மற்றும் வெறுக்கத்தக்க விஷயமாகவே உள்ளது. ஆனால் உண்மையில், விளம்பரங்கள் மறைமுகமாக நம்மை மூளைச்சலவைச் செய்யது, நம்மை அவர்களுடையப் பொருட்களை வாங்க வைத்து விடுகின்றனர். இதை மூலதனமாக வைத்தே, கணக்கிட முடியாத அளவிற்கு லாபம் அடைகின்றது நம்முடைய கூகுள்.

HOT NEWS