இங்கு நீங்கள் உணவு, தங்குமிடங்களை அறியலாம்! ஊரடங்கிற்காக கூகுள் அறிவிப்பு!

07 April 2020 அரசியல்
google.jpg

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்காக கஷ்டப்படுகின்றனர். இந்நிலையில், பொதுமக்களுக்கு உதவும் வகையில், புதிய வசதியினை கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

உலகம் முழுவதும், வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இணையதள செர்ச் என்ஜின் என்றால், அது கூகுள் மட்டுமே. அந்த நிறுவனம், பல சலுகைகளை வழங்கி வருகின்றது. உலகம் முழுக்க, பல நாடுகளில் தற்பொழுது ஊரடங்கு உத்தரவானது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியா முழுவதும் உள்ள 30 நகரங்களில் முதற்கட்டமாக, தன்னுடைய உதவியினை விரிவுபடுத்தி உள்ளது. அதன்படி, உணவு வழங்கப்படும் இடம், தங்குமிடம், நிவாரண முகாம்களைப் பற்றி, கூகுளில் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் உள்ள முக்கியமான 30 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

விரைவில் இந்த நகரங்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கப்படும் எனவும், அதற்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

HOT NEWS