விரைவில் கூகுள் டெபிட் கார்ட்! எங்கெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?

19 April 2020 தொழில்நுட்பம்
google.jpg

விரைவில் கூகுள் நிறுவனம், தன்னுடைய அடுத்த ப்ராஜெக்டான கூகுள் கிரெடிட் கார்டினை வெளியிட உள்ளது.

இது குறித்து, தகவல்கள் தற்பொழுது இணையத்தில் கசிந்துள்ளன. தற்சமயம், ஆப்பிள் நிறுவனம் தங்கள் சார்பில் ஆப்பிள் கிரெடிட் கார்டு வசதியினை உருவாக்கி உள்ளது. இதனை மக்கள் வெகுவாகப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இதற்குப் போட்டியாக, கூகுகள் நிறுவனமும் கிரெடிட் கார்ட் வசதியினை உருவாக்கி வருகின்றது. இதற்காக பிரபல நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களையும் உருவாக்கி உள்ளது.

இந்த கூகுள் கிரெடிட் கார்டினைப் பயன்படுத்தி, நான் ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்யலாம். பொருட்களை வாங்கலாம். பணத்தினை சேமிக்கவும் செய்யலாம். இது கையில் கார்டாகவும், அதே போல், ஆன்லைன் கார்டாகவும் வழங்கப்பட உள்ளது. இது குறித்த ஆய்வுகள் தற்பொழுது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இது கூகுள் உருவாக்கியுள்ள சேவை என்பதால், இதற்கு விதிக்கப்படும் கட்டணம் மிகக் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், அதிக சலுகைகள், பரிசுகளும் கிடைக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. மிகவும் நுணுக்கமான தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டு உள்ளதால், இதனை ஹேக் செய்வது உள்ளிட்ட எவ்வித பிரச்சனைகளும் உருவாகது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சேவையில் உள்ள சிக்கல்கள் பற்றியும், தேவைப்படுகின்ற உதவிகள் பற்றியும் தற்பொழுது கூகுள் நிறுவனம் ஆய்வு செய்து வருதவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முறையான அனுமதி கிடைக்கும் பட்சத்தில், விரைவில் இந்த வசதியானது, இந்த ஆண்டு இறுதிக்குள் வரும் என்று கணிக்கப்பட்டும் உள்ளது.

HOT NEWS