ரௌடி பேபி சூர்யா உன்னை மறக்க முடியவில்லை, ஐ லவ் யூ என, ஜிபி முத்து அதிரடியாக வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
டிக்டாக் பிரபலமாக இருப்பவர் ரௌடி பேபி சூர்யா எனும் சுப்புலட்சுமி. இவர் தன்னுடைய கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருபவர். இவரும், டிக்டாக்கின் மற்றொரு பிரபலமான ஜிபி முத்து என்பவரும் இணைந்து, வீடியோக்களை வெயிட்டு வந்தனர். இதில், சூர்யாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக, அவர் கூறினார். ஆனால், ஜிபி முத்துவிற்கு அப்படியொரு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனாலும், இருவரும் தொடர்ந்து டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனிடையே, சூர்யா மற்ற ஆண்களுடன் இணைந்து, டூயட் பாடல்களுக்கு, வீடியோ வெளியிட்டு வந்தார். இதனால், ஜிபி முத்து மனமுடைந்துவிட்டார் போல.
தற்பொழுது, வெளிப்படையாக, வீடியோ ஒன்றினை வெளியிட்டு உள்ளார். அதில், சூர்யா உனக்கு நான் மட்டும் தான் மாமா! நீ என் கூட மட்டும் தான், டூயட் பாட வேண்டும். ஆனால், நீ பல பேருடன் டூயட் பாடுகின்றாய். நீ எனக்கு வேண்டும். ஐ லவ் யூ என வீடியோ வெளியிட்டுள்ளார்.
இது தற்பொழுது, யூடியூப் உட்பட பல சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இவர்கள் இருவரையும், மற்றவர்கள் கிழிகிழியென, சமூக வலைதளங்களில் மட்டுமின்றி, டிக்டாக்கிலும் கிழித்து வருகின்றனர்.