பிரதமரே தயவு செஞ்சு டிக்டாக்கினை அனுமதிங்க! ஜிபி முத்து வேண்டுகோள்!

04 July 2020 அரசியல்
gpmuthu.jpg

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில், லடாக்கில் போர் பதற்றம் நிலவு வருகின்ற காரணத்தால், இந்திய அரசு டிக்டாக்கினை தடை செய்தது. அதனை அனுமதிக்குமாறி, டிக்டாக் தமிழ் ஸ்டார் ஜிபிமுத்து கோரிக்கை வைத்துள்ளார்.

20 இந்திய வீரர்களை சீன இராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்திக் கொன்றதால், லடாக் பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இரு நாட்டு இராணுவமும் தங்களுடையப் படையினை குவித்த வண்ணம் உள்ளனர். இந்த சூழ்நிலையில், இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்த டிக்டாக் உட்பட 59 சீன ஆப்களை தடை செய்தது இந்திய அரசு. இந்த ஆப்கள், பாதுகாப்பற்றவை என்றுக் கூறியுள்ளது.

இந்த சூழ்நிலையில், டிக்டாக்கிற்கு அடிமையானவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விதிப் பிதுங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள டிக்டாக் பிரபலங்களில், ஜிபி முத்து என்பவரை பலருக்கும் தெரியும். அவர் தான் உண்ணும் உணவு, உடுத்தும் உடை உள்ளிட்டவைகளைப் பற்றி வீடியோ வெளியிட்டு வந்தார். அவர் தற்பொழுது பாரதப் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாரதப் பிரதமரே, தயவு செய்து அந்த டிக்டாக்கினைப் பயன்பாட்டிற்கு கொண்டு வாருங்கள். அதன் மீதானத் தடையினை நீக்குங்கள் என்றுக் கோரிக்கை விடுத்துள்ளார். அவருடையப் பேச்சிற்கு, பல டிக்டாக் பிரபலங்களும் தங்களுடைய ஆதரவினை தெரிவித்து உள்ளனர்.

HOT NEWS