இங்கிலாந்தைத் தொடர்ந்து, கிரீசிலும் லாரியில் மனிதர்கள்! அதிர்ஷ்டவசமாக பாதிப்பின்றி தப்பித்தனர்!

05 November 2019 அரசியல்
ambulance.jpg

நாளுக்கு நாள் ஆள்கடத்தல் மற்றும் ஆள்மாறாட்டம் ஆகியவை, நாடு விட்டு நாடு அளவிற்கு வந்துவிட்டது. சென்ற வாரம் தான், இங்கிலாந்து நாட்டில் எஸ்ஸக்ஸ் பகுதியில், குளீரூட்டப்பட்ட லாரி கண்டெய்னரில், 39 மனித சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவம், ஐரோப்பிய நாடுகளில், பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

அந்த சம்பவம் பற்றியப் பேச்சு அடங்குவதற்குள், அடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, கிரீஷ் நாட்டின் வடக்குப் பகுதியில், சாலையில் செல்லும் வாகனங்களைச் சோதனை செய்யும் பொழுது, குளிரூட்டப்பட்ட லாரி கண்டெய்னரில் இருந்த, 41 பேரினை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த லாரியினை இயக்கி வந்த 40 வயது மதிக்கத்தக்க டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து பேட்டியளித்துள்ள போலீசார், சட்டத்திற்கு விரோதமாக, குடியேறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்கும் பொருட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றோம். அதில், இன்று இந்த லாரியில் உள்ள 41 பேர் சட்டவிரோதமாக இடம்பெயர்கின்றனர் என்றுக் கூறியுள்ளார். இந்த 41 பேரும், ஆண்கள் மற்றும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, மேலும் விசாரணையானது நடைபெற்று வருகின்றது.

source:edition.cnn.com/2019/11/04/europe/greece-migrants-truck-intl/index.html

HOT NEWS