நீட் ஜேஇஇ தேர்விற்கு கிரேட்டா துன்பெர்க் எதிர்ப்பு! சோனு சூட் ஆதரவு!

26 August 2020 அரசியல்
greetathunberg.jpg

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வினை நடத்தக் கூடாது என, கிரேட்டா துன்பெர்க் மற்றும் சோனு சூட் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

இந்தியா முழுக்க கொரோனா வைரஸ் பெருந்தொற்றானது, நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த சூழ்நிலையில், இந்த கல்வியாண்டிற்கான மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வான ஜேஇஇ தேர்வுகளை, திட்டமிட்டப்படி நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த சூழ்நிலையில், மாணவர்கள் பலரும் இந்த தேர்வினை இக்கட்டான இந்த நிலையில் நடத்த வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் பேசி வருகின்றனர். இந்திய அளவில் இந்த தேர்வு விவகாரம், அதிருப்தியினை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, உலகளவிலும் குரல் ஒலிக்கத் துவங்கி உள்ளது. உலகியல் சமூக செயல்பாட்டாளரான கீரீட்டா துன்பெர்க், தற்பொழுது இதற்கு குரல் கொடுத்துள்ளார்.

இது குறித்த தன்னுடைய டிவிட்டர் பதிவில், இந்தியாவில் பெருந்தொற்று பரவி வருகின்ற தருணத்தில், இத்தகைய தேசிய தேர்வுகளை எழுதுவதற்கு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது நியாமே அல்ல, மாணவர்களின் தேர்வினை தள்ளி வைக்கும் கோரிக்கைக்கு துணை நிற்பேன் என்றுக் கூறியுள்ளார்.

இது குறித்து பாலிவுட் நடிகர் சோனு சூட், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். நான் இந்திய அரசிற்கு ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன். தயவு செய்து ஜேஇஇ நீட் தேர்வுகளை தள்ளி வையுங்கள். இந்த கொரோனா தொற்றுக் காலத்தில் நாம் மாணவர்களின் உயிரினைக் காக்க வேண்டும் என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS