உங்களுக்கு எவ்வளவு தைரியம்? குழந்தையின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் விழித்த தலைவர்கள்!

24 September 2019 அரசியல்
gretathunberg.jpg

தற்பொழுது உலகமே, ஒரு சிறிய 16 வயதுப் பெண்ணினைப் பற்றியேப் பேசி வருகிறது. அந்த அளவிற்கு, அப்பெண் அனைத்துத் தலைவர்களின் வாயையும் அடைத்துவிட்டார். அவருடைய காட்டமான, பேச்சின் காரணமாக, சர்வதேச தலைவர்களும் விழி பிதுங்கி இருக்கின்றனர் என்றால் அது மிகையாகாது.

கிரீட்டா துன்பெர்க் என்ற 16 வயதுடைய ஸ்வீடன் நாட்டினைச் சேர்ந்த பெண் நேற்று, அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற்ற, சர்வதேச ஐநா பருவ நிலை மாற்றம் குறித்தக் கூட்டத்தில், கலந்து கொண்டு பேசினார்.

அவர் தன்னுடையப் பேச்சினைத் தொடங்கும் பொழுது, எவ்வளவு தைரியம் உங்களுக்கு என ஆரம்பித்தார். அனைவரும் கை தட்டி ரசித்தனர். அப்பொழுது, நான் இங்கு இருக்கக் கூடாது. நான் பள்ளியில் இருக்க வேண்டியவள். ஆனால், நீங்கள் என்னுடைய கனவினையும், என குழந்தைப் பருவத்தையும் வெறும் வார்த்தைகளால் கொன்றுவிட்டீர்கள். நாங்கள் உங்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.

பொதுமக்கள் கஷ்டப்படுகின்றனர். பலர் இறந்து கொண்டு இருக்கின்றனர். நம்முடைய மொத்த சுற்றுசூழலும் மாறிவிட்டது. நாம் மொத்தமான முடிவின் விளிம்பில் உள்ளோம். ஆனால், நீங்கள் அனைவருமே, பணத்தைப் பற்றி மட்டுமேப் பேசி வருகின்றீர்கள். மேலும், ஒன்றும் இல்லாதப் பொருளாதாரத்தைப் பற்றி மட்டுமேப் பேசி வருகின்றீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் என்று பேசினார்.

கடந்த 30 வருடங்களாக, அறிவியலானது மிகத் தெளிவாக உள்ளது. நீங்கள், நாங்கள் சொல்வதைக் கேட்கின்றீர்கள் என்று கூறுகின்றீர்கள். அவசரத்தைப் புரிந்து கொள்வதாகவும் கூறுகின்றீர்கள். ஆனால், நான் எவ்வளவு வருத்தத்துடனும், கோபத்துடனும் இருக்கின்றேன் என உங்களுக்குத் தெரியாது. நிலைமை எப்படி இருக்கின்றது எனத் தெரிந்தும், நீங்கள் எதுவும் செய்யவில்லை என்றால், நீங்கள் கொடூரமானவர்கள்.

நாம் தற்பொழுது முயற்சி செய்தால், 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் குறைக்க, வெறும் 50% வாய்ப்புகளே உள்ளன. நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இல்லாத, இயற்கை சங்கிலி உருவாகிவிடும். அது அனைவருக்குமே தீங்கு விளைவிக்கும்.

தற்பொழுதுள்ள தாவரங்கள் பல லட்சம் கோடி கார்பன் டை ஆக்சைடை இழுத்துக் கொள்கின்றன. அது அதிகமாக நீடிக்காது என பேசினார். இவருடைய இந்த கடுமையானப் பேச்சை எதிர்ப்பார்க்காத தலைவர்கள், வேறு வழியின்றி, கைதட்டி சமாளித்தனர்.

HOT NEWS