குரூப் 4 பணியிடங்கள் அதிகரிப்பு! தேர்வெழுதியவர்கள் மகிழ்ச்சி!

26 November 2019 அரசியல்
tnpsc.jpg

குரூப் 4 தேர்வானது, கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெற்றது. அதில், சுமார் 16 லட்சம் பேர் இந்தத் தேர்வினை எழுதினர்.

தொடர்ந்து அதிகரித்து வரும், வேலைவாய்ப்பின்மைக் காரணமாக, அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றது. செப்டம்பர் மாதம் நடைபெற்றத் தேர்விற்கான, மதிப்பெண்கள் வெளியிடப்பட்டன.

தற்பொழுது, தேர்வு எழுதியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றினை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஆம், 6,400 பேருக்கு மட்டுமே குரூப் 4 தேர்வு நடைபெற்றது. ஆனால், தற்பொழுது கூடுதலாக மேலும் 3,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது. அதாவது மொத்தம் 6,400 காலிப் பணியிடங்கள் நடந்தத் தேர்வானது, 9,400க்கு மாற்றி இருப்பதாகவும், அதனை குரூப் 4 தேர்வில் முன்னிலையில் இருப்பவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் எனவும், டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இதனால், கூடுதலாக மேலும், மூவாயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

HOT NEWS