ஜிசாட்-30ஐ செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!

17 January 2020 அரசியல்
gsat30i.jpg

இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ஜிசாட்-30ஐ செயற்கைகோளினை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இன்று அதிகாலை 2.35 மணியளவில், இந்த செயற்கைக் கோளினை இந்தியாவில் இருந்து ஏவாமல், தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானா பகுதியில் இருந்து, ஏரியான் ராக்கெட் 5 மூலம் ஜிசாட்-30 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

இந்த செயற்கைக் கோளானது, தெளிவான தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பிற்காக பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ஜிசாட்-30ஐ செயற்கைக் கோளானது மூன்றாயிரத்து 357 கிலோ கிராம் எடை கொண்டது. இந்த செயற்கைக் கோளானது, க்யூ-பேண்ட் மூலம் இந்தியாவிற்கும், சி பேண்ட் மூலம் வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகளுக்கும் தன்னுடைய சேவையை வழங்க உள்ளது.

HOT NEWS