குஜ்ஜார் இன மக்கள் கடுமையான போராட்டம்! தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்! தொடரும் பதற்றம்!

01 November 2020 அரசியல்
rajasthan-1.jpg

ராஜஸ்தான் மாநிலத்தின் 8 மாவட்டங்களில், குஜ்ஜார் இன மக்கள் போராட்டம் அறிவித்ததால், அங்கு அவசர அவசரமாக தேசியப் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தினைச் சேர்ந்த குஜ்ஜார் இன மக்கள், ஆடு, மாடு வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவைகளைச் செய்து வருகின்றனர். இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமாக வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்டவைகளில் இட ஒதுக்கீடு வேண்டும் என்றுக் கோரிக்கை வைத்தனர்.

இருப்பினும், அதனை காங்கிரஸ் கட்சியின் அசோக் கெலாட் தலைமையிலான அரசு, தற்பொழுது வரை ஏற்கவே இல்லை. இதன் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக விட்டு விட்டு போராட்டம் நடத்தி வருகின்ற குஜ்ஜார் இன மக்கள், தற்பொழுது முழுமையான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். நவம்பர் 1ம் தேதி முதல் இந்தப் போராட்டத்தினை நடத்தப் போவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பினால், அம்மாநில முதல்வர் அவசர அவசரமாக முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து, ஆலோசனை நடத்தினார்.

பின்னர், ராஜஸ்தான் மாநிலத்தின் பாரத்பூர், தோல்பூர், சவாய் மாதோபூர், தவுசா, டோங்க், புண்டி மற்றும் ஜலாவர் உள்ளிட்ட மாவட்டங்களில், தேசியப் பாதுகாப்பு சட்டமானது அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், அவர்கள் போராட்டம் நடத்த முடியாது. ஏற்கனவே பலமுறை நடைபெற்ற போராட்டங்கள் அனைத்துமே, கலவரத்தில் முடிந்ததால் இந்த முடிவினை அம்மாநில அரசு எடுத்துள்ளது.

HOT NEWS