குஜராத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட எம்எல்ஏவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நேற்று குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபிணி தலைமையில், இரண்டு அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஜமல்பூர்காடியாவினைச் சேர்ந்த இம்ரான் கெதாவல் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் அனைவரும், ஒரு மீட்டர் தூரம் இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டனர்.
இந்நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பதற்கான அறிகுறிகள் அவருடைய உடலில் தென்பட்டன. அவரிடம் காந்திநகரில் உள்ள எஸ்விபி மருத்துவமனையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த சோதனையில், அவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் அந்த மருத்துவமனையில் தனிமைப் படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவருடன் யார் யார் தொடர்பில் இருந்தார்கள் என, போலீசாரும் சுகாதாரத் துறையினரும் விசாரணை செய்து வருகின்றனர். அவருடன் எத்தனைப் பேர், தொடர்பில் இருந்தார்கள் என யாருக்கும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் 617 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 55 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.