உச்சகட்ட கண்காணிப்பில் குஜராத் கடற்பகுதி! பாக் வீரர்கள் ஊடுறுவல்?

29 August 2019 அரசியல்
deepdivers.jpg

காஷ்மீர் விவகாரத்தை நம் நாடு எடுத்தாலும் எடுத்தது. பாகிஸ்தான் தொடர்ந்து, தன்னுடை சேட்டையை காட்டிக் கொண்டே இருக்கிறது. முதலில் தன்னுடையப் படையை, எல்லைப் பகுதியில் நிறுத்தியது. நாம் அசரவில்லை. பின்னர், அத்துமீறி நம் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. ஆனால், நம் வீரர்களும் பதிலடிக் கொடுத்ததால், என்ன செய்வதென்றுத் தெரியாமல், தற்பொழுது கடற்படை வீரர்களை இறக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஐஏஎன்எஸ் நிறுவனம், குஜராத்தின் முக்கிய கடற்பகுதிகளில், நீரில் மூழ்கி சண்டையிடும் வீரர்கள் பாகிஸ்தான் மூலம், அனுப்பப்பட்டுள்ளனர் எனவும், அவர்கள் நம் நாட்டின் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தலாம், எனவும் கூறியுள்ளது.

மேலும், உளவுத்துறையும் இதனை கூறியுள்ள நிலையில், குஜராத் மட்டுமின்றி, இந்தியாவின் அனைத்துக் கடற்பகுதிகளும் உஷார் நிலையில் உள்ளன. இந்தியக்கடற்படையினர், சந்தேகம் ஏற்பட்டுள்ள குஜராத் உள்ளிட்டப் பகுதிகளில், தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குஜராத் உள்ளிட்ட அனைத்துத் துறைமுகங்களும், முழு எச்சரிக்கையுடன், தீவிர கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

HOT NEWS