ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட கல்லி பாய்! ரன்வீருக்கு லக்!

22 September 2019 சினிமா
gullyboy.jpg

வருடா வருடம், தலைசிறந்த படங்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு, வருகின்றது. ஹாலிவுட் படங்களுக்கு மட்டுமின்றி, சர்வதேசப் படங்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும், பலப் படங்கள் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு நாடும், தன்னுடைய சிறந்தப் படத்தினை, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கின்றனர். அவ்வரிசையில், இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதிற்கு இந்தியாவின் சார்பில், ரன்வீர்சிங் நடித்த குல்லி பாய் திரைப்படம், பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட் நடிப்பில், பாலிவுட்டில் வெளிவந்த குல்லி பாய் படம், சக்கைப் போடு போட்டது. சுமார் 150 கோடி ரூபாய் வரை வசூல் செய்த இப்படத்தினை, தற்பொழுது நம் இந்தியா சார்பில், பரிந்துரைக்கப்பட்டது, ஒத்த செருப்பு, சூப்பர் டீலக்ஸ் மற்றும் வட சென்னை உட்பட, மொத்தம் 28 திரைப்படங்கள் இந்த பரிந்துரைப் பட்டியலில் இருந்தன. இருப்பினும், இந்த குல்லி பாய் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

HOT NEWS