துப்பாக்கிச் சூடு! மாணவர் படுகாயம்! மீண்டும் ஆரம்பித்த போராட்டம்!

31 January 2020 அரசியல்
jamiagunshot.jpg

இந்தியா முழுவதும் பல இடங்களில், பல காரணங்களுக்காக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்களும், போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காந்தியின் நினைவு நாளான நேற்று, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்கள் ஒன்று கூடினர். அப்பொழுது, பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இருப்பினும், மாணவர்கள் கூட்டத்தினை நோக்கி வந்த மர்ம நபர், தன்னுடைய கையில் வைத்திருந்த துப்பாக்கியால் மாணவர்களை நோக்கி சுட்டார்.

இந்நிலையில், அவரை மடக்கிப் பிடித்த போலீசார் கைது செய்தனர். இருப்பினும், அவர் சுட்டதில் சதாப் பரூக் என்ற மாணவர் துப்பாக்கிச் சூட்டினால் காயம் அடைந்தார். அவருடைய கையில், துப்பாக்கி குண்டு நுழைந்தது. இருப்பினும், அவர் மருத்துவமனைக்குச் செல்ல போலீசார் வழிவிட வில்லை. இதனால், வேறு வழியின்றி, போலீசாரின் தடுப்புகளை ஏறிக் குதித்து, அவர் மருத்துவமனை சென்றார்.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தினைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவரைப் பார்க்கப் பலரும் சென்றனர். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் இருப்பதாகவும், அவர் கையில் பாய்ந்திருந்த குண்டு எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

HOT NEWS