கருப்பர் கூட்டம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! அரசு அதிரடி!

27 July 2020 அரசியல்
karupparkootam1.jpg

கருப்பர் கூட்டம் சுரேந்தர் மீது, இந்திய குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கருப்பர் கூட்டம் என்றப் பெயரில், யூடியூப் சேனல் ஒன்றினை கருப்பர் கூட்டம் குழுவினர் நடத்தி வந்தனர். அதில், ஆபாசப் புராணம் என்றப் பெயரில், இந்து மத தெய்வங்களையும், இதிகாசங்கள் மற்றும் புராணங்களையும் இழிவுபடுத்தும் விதமாகப் பேசி வந்தனர்.

இதன் உச்சமாக, தமிழர்களால் அதிகம் வணங்கப்படும் தெய்வமாகிய முருகப் பெருமானைப் போற்றிப் பாடப்படும், கந்த சஷ்டி கவசத்தினை கொச்சையாகப் பேசி வீடியோவினை வெளியிட்டனர். இது தற்பொழுது, தமிழகம் முழுவதும் பெரிய சர்ச்சையினை கிளப்பி உள்ளது. இது தொடர்பாக, இந்து மத ஆர்வலர்களும், பாஜகவினரும் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

அவர்கள் மீது, சென்னை சைபர்க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து கருப்பர் கூட்டம் சேனல் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அந்த சேனலை நடத்தி வந்த செந்தில்நாதன் என்பவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். மேலும், அந்த நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கிய சுரேந்தர் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து, மேலும் மூன்று பேரினைப் போலீசார் கைது செய்தனர். இதனிடையே, கருப்பர் கூட்டம் சேனலில் இருந்த 500 வீடியோக்களை சைபர் க்ரைம் போலீசார் நீக்கினர். மேலும், கருப்பர்கூட்டம் சேனலை நீக்குவதற்கு, யூடியூப் நிர்வாகத்திற்கு சிபாரிசும் செய்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சுரேந்தர் மீது ஏற்கனவே ஐந்துப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், தற்பொழுது அவர் குண்டர் சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

HOT NEWS