குவைத் எண்ணெய் கப்பலில் விபத்து! உதவிக்கு விரைந்த இந்தியா!

04 September 2020 அரசியல்
guwaitoiltanker.jpg

குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்த எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினை, கட்டுப்படுத்த இந்தியா களமிறங்கி உள்ளது.

இந்தியாவிற்கு குவைத் நாட்டில் இருந்து, எம்.டி.நியூ.டைமண்ட் என்ற சரக்குக் கப்பலானது, 2 லட்சத்து 70 ஆயிரம் டன் கச்சா எண்ணெயினை எடுத்துக் கொண்டு, இந்தியாவிற்கு வந்து கொண்டு இருந்தது. இந்த கப்பலில் உள்ள கச்சா எண்ணெயானது, ஒடிசாவில் உள்ள பாராதீப் என்ற இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு சுத்திகரிக்கப்பட இருந்தது.

இந்த சூழ்நிலையில், இந்தக் கப்பலானது, இலங்கைத் துறைமுகத்தில் இருந்து இந்தியாவிற்கு திரும்பிய நிலையில், இன்று காலை எட்டு மணியளவில் அக்கப்பலில் திடீரென்று தீப்பிடித்தது. இதனையடுத்து, இலங்கையின் இரண்டு கப்பல்கள் மற்றும் ஒரு விமானம் உள்ளிட்டவை தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளன. அதே போல், இந்தியாவில் இருந்து 3 கப்பல்களும் ஒரு டோர்னியர் விமானமும் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

தற்பொழுது தீயானது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், கப்பலில் உள்ள கச்சா எண்ணெயானது, கடலில் கலக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கையின் தேசியக் கடல் பாதுகாப்பு மையம் தெரிவித்து உள்ளது. இந்தக் கப்பலில் இருந்து 23 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவர் காயமடைந்து உள்ளார்.

HOT NEWS