2021ல் ஹெச் ராஜா அமைச்சராக்கப்படுவார்! அண்ணாமலை அதிரடி பேட்டி!

26 December 2020 அரசியல்
annamalaibjp1.jpg

2021ம் ஆண்டில், ஹெச் ராஜா அமைச்சராக்கப்படுவார் என, தமிழக பாஜகத் துணைத்தலைவர் அண்ணாமலைத் தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கான ஆயத்தப் பணிகளை, பாஜகவின் அண்ணாமலை துவக்கி வைத்தார். அப்பொழுது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், கடந்த 70 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு எவ்வித நலன்களும் செய்யாமல், அவர்களை கூன் முதுகு உள்ளவர்களாக, காங்கிரஸ் கட்சியானது மாற்றியுள்ளது. காரைக்குடியில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும், பாஜக எம்எல்ஏக்கள் வெற்றி பெறுவர்.

ஹெச். ராஜா அவர்கள் இங்கு எம்எல்ஏவாக வெற்றி பெற்று, தமிழக சட்டப்பேரவையில் அமைச்சராக இடம்பிடிப்பார் எனத் தெரிவித்து உள்ளார். இன்னும் மூன்றே மாதங்களில் மேற்கு வங்கத்தில் உள்ள மம்மதா அரசானது, வேரோடு அறுத்தெரியப்படும். வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும், துளி அளவு கூட மாற்றத்தினை மத்திய அரசு செய்யாது.

தமிழகத்தில் நடைபெற உள்ளத் தேர்தலில் முக ஸ்டாலினின் திமுக கட்சியானது, காணாமல் போகும். பாஜக கைக்காட்டும் நபரை, நீங்கள் எம்எல்ஏ ஆக்குங்கள் என, அண்ணாமலை பேசினார்.

HOT NEWS