விரைவில் சட்டமாகும் எச்1பி விசா மசோதா? இந்தியர்களைப் பாதிக்குமா?

26 May 2020 அரசியல்
usa-passport.jpg

விரைவில் எச்1பி விசா சட்டமாகும் என, அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸால் உலகின் வல்லரசு நாடானத, அமெரிக்கா தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், அந்நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியாகும் விதத்தில் பாதிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் பொருளாதாரத்தினைக் காப்பாற்றும் பொருட்டு, அந்த நாட்டில் இருந்து வெளியில் அனுமதிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் அனைத்தையும், அந்நாட்டில் உள்ளவர்களுக்கே திருப்பி விட, அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதனால், அமெரிக்காவின் வேலை வாய்ப்பு பெருகும் எனவும் கூறப்படுகின்றது. அதுமட்டுமின்றி, சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் அனைத்தும், சீனாவினை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளன.

இதனால், அதிகப்படியான வேலைவாய்ப்புகளை அமெரிக்காவினால், அந்நாட்டினருக்கு உருவாக்கித் தர இயலும். இந்த எச்1பி விசா மற்றும் எல்1 விசா ஆகியவைகள் மூலம், வெளிநாட்டில் இருபவர்கள், அமெரிக்காவிற்குச் சென்று வேலை செய்ய இயலும். இவைகளுக்கு, தடை அல்லது அதிக கட்டுப்பாடுகளை விதிக்க, அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலமும், அமெரிக்காவினரே அமெரிக்காவில் அதிக சம்பளத்தில் வேலைப் பார்க்க இயலும் என்றுக் கூறப்படுகின்றது. இதில், தற்பொழுது புதிய விதியினையும் சேர்த்துள்ளது. அதன்படி, அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டவர்களுக்கும், இந்த எச்1 பி விசாவினை வழங்க முடிவு செய்துள்ளனர். இதனால், அமெரிக்காவில் படிக்கும் பிற நாட்டினர் அதிக பலன் அடைய இயலும்.

இந்த மசோதாவானது, அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இவைகள் இரண்டு சபைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு, அமலுக்கு வந்துவிட்டால் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று வேலை செய்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இந்தியாவினைச் சேர்ந்தவர்கள், பெரும்பாலும் வெளிநாடு சென்று வேலைக்குச் செல்ல விரும்பினால், அமெரிக்கா தான் செல்கின்றனர்.

இந்த விசா சட்டத்திருத்தம் அமலுக்கு வந்துவிட்டால், இந்தியாவில் இருந்து நேரடியாக, அமெரிக்கா சென்று வேலை செய்பவர்களின் எண்ணிக்கையானது கணிசமாகக் குறையும் என்றுக் கூறப்படுகின்றது.

HOT NEWS