அமெரிக்காவில் செட்டிலாகும் இந்தியர்கள் எண்ணிக்கை 300% அதிகரிப்பு!

22 March 2019 தொழில்நுட்பம்
greencard.jpg

இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் செட்டிலாகும் இந்தியர்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின், பல புதியக் கட்டுப்பாடுகளை உலக நாடுகளுக்கு விதித்தார். அதன்படி, அமெரிக்காவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், இந்தியாவில் இருந்து, அமெரிக்கா சென்று குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 2016ல் இருந்ததை காட்டிலும், 2018ல் 293% பேர் அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். 2016ம் ஆண்டு, 149 பேரும், 2017ம் ஆண்டு 174 பேரும் 2018ம் ஆண்டு 585 பேரும் குடியேறியுள்ளனர். இந்தியாவை அடுத்து வியட்நாமும், சீனாவும் உள்ளன.

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு மற்றும் பலப் பிரச்சனைகள் காரணமாக, இந்தியாவில் பணம் சம்பாதிக்கும் மக்கள், வரி கட்ட மனமில்லாமல், அமெரிக்கா சென்று தாங்கள் நினைக்க விரும்பிய சொகுசான வாழ்க்கையை வாழ்கின்றனர். மேலும், அமெரிக்காவில் இருந்து சொகுசுப் பொருட்கள், வாகனங்களை இறக்குமதி செய்தால், அதற்கு விதிக்கப்படும் வரியானது, கிடத்தட்ட பொருளின் பாதி விலையாக உள்ளது. இதனால், அமெரிக்காவுக்கே சென்று குடியேறுவதும் ஒரு முக்கியக் காரணமாகும்.

HOT NEWS