ஹபீஸ் சையதிற்கு 11 ஆண்டுகள் சிறை! பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு!

14 February 2020 அரசியல்
hafeezsaeed.jpg

மும்பைத் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைவராக கருதப்பட்ட, ஹபீஸ் சையத்திற்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2008ம் ஆண்டு, மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில், 188 இந்தியர்களும், ஆறு அமெரிக்கர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக, ஹபீஸ் சையத் மீது, அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சுமத்தின. பல தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்து வருவதாக, அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில், அவருடைய தலைக்கு 71 கோடி ரூபாயானது வெகுமதியாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, சென்ற ஆண்டு, பாகிஸ்தான் அரசாங்கத்தால், ஹபீஸ் சையத் கைது செய்யப்பட்டார். அவர் தான், லஷ்கர்-ஈ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஆவார். அவருடன், அவருடையக் கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் மீது, ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், இரண்டு வழக்குகள் மீதான விசாரணை முடிந்து, தீர்ப்பு வெளியிட நீதிமன்றம் தயாரானது. ஆனால் ஹபீஸ் தரப்பில், நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், மீதமுள்ள வழக்குகளை விசாரித்தப் பின்னர், மொத்தமாக தண்டனையை அறிவிக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

ஆனால், அதற்கு தன்னுடைய கடுமையான கண்டனத்தினை அரசாங்கம் பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்பட்டு தற்பொழுது தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இரண்டு வழக்குகளில் 5.5 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 15,000 ரூபாய் அபராத்தினையும் நீதிமன்றம் விதித்துத் தீர்ப்பளித்தது.

HOT NEWS