முடி கொட்டுவதைத் தடுக்க குமட்டிக் காய்! அறிந்திராத வீட்டு வைத்தியம்!

19 September 2019 உடல்நலம்
kummattikka.jpg

குமட்டிக் காய்யை நாம் அனைவருமே பார்த்திருப்போம். குப்பை மாதிரி கிடக்கும் பகுதிகளில், கொடி போல படர்ந்திருக்கும் இது, பார்ப்பதற்கு சிறிய வகை தர்ப்பூசணிப் போல இருக்கும்.

இந்தக் குமட்டிக் காயினை, கொமட்டிக் காய், ஆற்றுத்தும்மட்டி காய், வரித்தும்பேய்க்குட்டி காய் எனவும் கிராமத்துப் பகுதிகளில் அழைப்பர். இதன் பிறப்பிடம் எது என்று சரியாக தெரியவில்லை. ஆனால், இந்தக் காய், இஸ்ரேல், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் பாலஸ்தீனம் போன்ற, வெப்பமண்டல நாடுகளில் அதிகம் காணப்படுகிறது.

இது பார்ப்பதற்கு பச்சை நிறத்தில், வெள்ள மற்றும் மஞ்சள் நிறக் கோடுகளுடன் பார்ப்பதற்கு, மிக அழகாக இருக்கும். இதனை சாப்பிட்டால், கசப்புத் தன்மையின் காரணமாக குமட்ட ஆரம்பித்துவிடும். அதனால், இதனை குமட்டிக் காய் என அழைக்க ஆரம்பித்தனர். அப்படியே, அது இதன் பெயராகவும் ஆனது. அதுவாப்பா இப்போ முக்கியம், விஷயத்துக்கு வாப்பான்னு சொல்றீங்கன்னு நல்லாவேத் தெரியுது!

இதனை தாவரங்களிலிருந்து பூச்சிகளை விரட்டப்பயன்படுகிறது. விலங்குகள் அதிலும் குறிப்பாக மாடுகள் மீது உண்ணிகள் எனப்படும், சிறிய வகை பூச்சிகள் ஒட்டாமல் இருக்க இதுப் பயன்படுகிறது. இதனை அறைத்து, மாட்டின் மீது பூசி, பின்னர் குளிப்பாட்டினால், உண்ணிகள் அழிந்து போகும்.

உடம்பில் கொப்புளங்கள் வந்தால், அப்பகுதியில் இதனை அரைத்து தடவ, வேண்டும். உடனே சரியாகிவிடும்.

தலையில் முடி கொட்டி, சொட்டை, வழுக்கை விழுந்தால், இந்த குமட்டிக் காயை அரைத்து, அதனை சொட்டை மற்றும் வழுக்கை விழும் இடங்களில், முடி அதிகமாக கொட்டும் இடங்களில் தேய்க்கும் பொழுது, அந்தப் பகுதிகளில், நிச்சயமாக முடி முளைக்கும்.

முடி உதிர்வுப் பிரச்சனை, பொடுகுத் தொல்லை, தலையில் உள்ள தோல் உரிதல், முடியின் வலிமை குறைவு என, தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள், இந்தக் குமட்டிக்காயை அரைத்து, தலையில், முதலில் மசாஜ் செய்வது போல செய்ய வேண்டும். பின்னர், அதனை கொஞ்சம் நிறைய சேர்த்து, அதனை தலையில், பசை போல அப்பிவிட வேண்டும். அவ்வாறு அப்பிய பின், தொடர்ந்து மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர், தலைக்கு நன்கு தேய்த்துக் குளிக்க வேண்டும். அவ்வாறு குளிக்கும் பொழுது, தலை முடி வளர்வதற்கான சுரப்பியானது, தலையில் சுரக்க ஆரம்பிக்கும். பின்னர், படிப்படியாக முடி முளைக்க ஆரம்பிக்கும்.

பல கெமிக்கல் பொருட்களைப் பயன்படுத்தி, முடியை இழக்காமல் இதனைப் பயன்படுத்தி, உங்கள் முடியினைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்!

HOT NEWS