இஸ்லாமியர்களுக்காக பேசிய ரஜினிக்கு நன்றி தெரிவித்த ஹஜ் கமிட்டி தலைவர்!

01 March 2020 அரசியல்
rajinimuslim.jpg

சிஏஏ விவகாரம் தொடர்பாக, ரஜினியின் கூறிய கருத்திற்கு நன்றி தெரிவிக்க, ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் ரஜினியினை நேரில் சந்தித்தார். அப்பொழுது, பூங்கொத்தும், சால்வை அணிவித்தும் தங்களுடைய கமிட்டி சார்பில் நன்றியினைத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், சிஏஏ விவகாரம் தொடர்பாக ரஜினி கூறிய கருத்திற்கு நன்றியினை தெரிவிக்க வந்தேன். ரஜினியின் கருத்துக்கள் இஸ்லாமியர்களுக்கு நம்பிக்கைக் கொடுத்துள்ளது.

ரஜினிகாந்திற்கு, சிஏஏ பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியது என ஒன்றும் இல்லை. அவர் இந்தியாவின் பொருளாதாரம் நன்றாக இருக்க வேண்டும் என விரும்புகின்றார். இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால், பாதிப்பு வந்தால் முதல் ஆளாக வருவேன் என அவர் கூறியிருக்கின்றார். இதற்காக நாங்கள் அவரை பாராட்டுகின்றோம். நன்றியும் தெரிவித்துக் கொள்கின்றோம். அவர் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் சூப்பர்ஸ்டார் எனத் தெரிவித்தார்.

HOT NEWS