பின் லேடன் மகன் சுட்டுக் கொலை! டிரம்ப் அதிகாரப் பூர்வ அறிவிப்பு!

15 September 2019 அரசியல்
hamzabinladen.jpg

ஒசாமா பின்லேடனைப் பற்றி, இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே தெரியும். அவ்வளவு பெரிய தீவிரவாதி. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலின் முக்கியப் பங்காற்றியவர். அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்தவர். அவர் கடந்த 2011ம் ஆண்டு, மே மாதம் 2ம் தேதி இரவு, அமெரிக்காவின் சீல் படையினரால், இரவு நடத்தப்பட்ட ஆப்பரேசன் நெப்ட்டியூன் ஸ்பியர் என்ற தாக்குதலில், பாகிஸ்தானில், பதுங்கியிருந்த பொழுது, சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனை அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்து, அப்பொழுது அதிபராக இருந்த ஒபாமா தன்னுடைய அதிகாரிகளுடன் நேரலையில் பார்த்தார். பின்னர், அதிரடியாக ஒபாமா இறந்ததை தெரிவித்தார்.

இந்நிலையில், அல்கொய்தாவிற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்ற கேள்விக் குறி இருந்து வந்த நிலையில், பின்லேடனின் 20 குழந்தைகளில், ஹம்சா பின்லேடன் தலைமையேற்று, அல்கொய்தாவினை வழி நடத்தினார்.

அவர், தொடர்ந்து ஈமெயில் அனுப்பி, கட்டளைகளைப் பிறப்பிப்பது, குறுந்தகவல்களை அனுப்புவது, போனில் கட்டளையிடுவது, நாசக்காரத் திட்டங்களுக்கு குழுக்களை அனுப்புவது உள்ளிட்டப் பல தீவிரவாத செயல்களில் ஈடுபட்டார். இதனால் கடுப்பான அமெரிக்கா, அவருடையத் தலைக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தது.

இந்நிலையில், அவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சார்பில், அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூலை 31ம் தேதி, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், நடத்தப்பட்ட தாக்குதலில், ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

HOT NEWS