அமெரிக்காவின் அடுத்த தலைவலி! ஹன்னா சூறாவளி புயல்!

29 July 2020 அரசியல்
cyclone.jpg

அமெரிக்கா ஏற்கனவே, கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த சூழ்நிலையில், அங்கு மற்றுமொரு பிரச்சனைத் தலைதூக்கி உள்ளது.

அமெரிக்காவில் வருடா வருடம் சூறாவளி புயலானது, தன்னுடைய கோர முகத்தினைக் காட்டுவது வழக்கம். இந்த ஆண்டும், அது தற்பொழுது தொடங்கி உள்ளது. ஹன்னா என்றுப் பெயரிடப்பட்டுள்ள சூறாவளியானது, அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் தன்னுடைய கோரமுகத்தினைக் காட்டி வருகின்றது.

இந்த புயலால், தற்பொழுது 30 செமீ அளவிற்கு மழைப் பெய்துள்ளது. இதன் காரணமாக, அந்த மாகாணமே வெள்ளமாகக் காட்சியளிக்கின்றது. அங்கு மீட்புப் பணிகளை துரித கதியில் செய்ய, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டு உள்ளார். இதுவரை, இந்த சூறாவளிப் புயலால் எவ்வித உயிரிழப்பும் பதிவு செய்யப்படவில்லை.

HOT NEWS