நடிகைகள் பலர் இருந்தாலும், தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளுள் ஒருவராகவும், இளைஞர்களின் மனதினைக் கொள்ளைக் கொள்பவராகவும் இருப்பவர் ஹன்சிகா மோத்வானி.
டயட் என்றப் பெயரில் பல நடிகைகள் எலும்பாக காட்சியளித்த காலத்தில், கொளுக் மொளுக் என்று ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்தவர். அவர் அவ்வாறு இருந்ததைக் கண்டுப் பலரும், அவரை சின்ன குஷ்பு என செல்லமாக அழைத்தனர். இந்நிலையில், பல வெற்றித் திரைப்படங்களில் அவர் நடித்தார். திடீரென்று, அவர் உடல் எடையினைக் குறைத்ததால், அவருக்குப் பட வாய்ப்புகள் குறைந்தன. ஆனால், அவரோ தரமானக் கதையை உடைய படத்தில் தான், நான் நடிப்பேன் எனக் கூறிவிட்டார்.
இதனால், அவருக்குப் பட வாய்ப்புகள் குறைந்தன. இந்த சூழ்நிலையில், அவர் நடித்து வருகின்ற 50வது திரைப்படமான மகா திரைப்படத்தில், அவர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். அந்தப் படத்தின் வேலைகள் முடிந்தும் விட்டன. ஊரடங்கின் காரணமாக, தற்பொழுது அனைவரும் வீட்டிலேயே இருப்பதால், எடைக் கூடி விட்டனர். இருப்பினும், அனைவருக்கும் எதிராக ஹன்சிகாவோ மிகவும் ஒல்லியாக மாறிவிட்டார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புதியப் புகைப்படம் ஒன்றினை, அவர் வெளியிட்டு உள்ளார். அதில், அவர் மிகவும் ஒல்லியாக காணப்படுகின்றார். இதனால், அவருடைய ரசிகர்கள் சோகம் அடைந்து உள்ளனர். இலியானாவின் உடலைப் போல, இவரும் மிக ஒல்லியாக காணப்படுகின்றார். இதனைப் பலரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், ஹன்சிகாவோ இது பற்றிக் கவலைப்படவேயில்லை. இவருடைய இந்த உடல் எடைக் குறைப்பால், சோகத்தில் உள்ளனர் சின்ன குஷ்புவின் ரசிகர்கள்.