இன்று கோலிவுட் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறந்த நாள். அவருடையப் பிறந்த நாளை, அவருடை ரசிகர்கள் தற்பொழுது கொண்டாடி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில், திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை, அனைவருமே தங்களுடைய வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். அவர் வழக்கம் போல், தன்னுடைய வீட்டை விட்டு விட்டு, பட சூட்டிங்கிற்குச் சென்றுவிட்டார்.
இருப்பினும், அவருடைய ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை. தொடர்ந்து, மாஸப் வீடியோக்கள், புதிய பாடல்கள் என பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
தற்பொழுது சமூக வலைதளம் முழுக்க, ரஜினியின் பிறந்தநாளுக்காக உருவாக்கப்பட்ட ஹேஸ்டேக்குகளே சுற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.