ஹர்பஜனுக்கு ஜோடியாக லாஸ்லியா! லாஸ்லியா காட்டில் பட மழை!

04 February 2020 சினிமா
harbhajanfilm.jpg

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஆரம்பித்ததில் இருந்து, ஹர்பஜன் சிங் கொண்டை வைத்த தமிழராக மாறி வருகின்றார். அந்த அளவிற்கு, தமிழ் மீதும், தமிழ்நாட்டின் மீதும் அதிக அக்கறைக் காட்டி வருகின்றார்.

தமிழில் ட்வீட்கள், வீடியோக்கள் என மனிதர் கலக்கி வந்தார். இதனிடையே, தற்பொழுது யூடியூப்பில், திருவள்ளுவர் கதாப்பாத்திரத்திலும் அவர் நடித்துள்ளார். அந்தத் தொடர் விரைவில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழ் திரைப்படத்தின் மூலம், கதாநாயகனாக ஹர்பஜன் சிங் புதிய அவதாரம் எடுக்கின்றார்.

ஜேபிஆர் மற்றும் ஸ்டாலின் தாயரிப்பில், ஹர்பஜன் சிங் நடிக்கும் படத்தின் பெயரினை நேற்று வெளியிட்டார் ஹர்பஜன். படத்திற்கு ப்ரெண்ட்ஷிப் எனப் பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகையாக, பிக்பாஸ்3 புகழ் லாஸ்லியா இணைந்துள்ளார். இவர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இவர் தற்பொழுது, ப்ரெண்ட்ஷிப் மற்றும் ஆரியுடன் இணைந்து, பெயர் வெளியிடாதப் படத்தில் நடிக்க உள்ளார். இவருக்கு இரண்டு படங்களில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், இவருடைய காதலர் கவினுக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS