இந்தியாவின் சார்பில் ஹர்சவர்தன்! அடுத்த WHO தலைவராக வாய்ப்பு!

20 May 2020 அரசியல்
harshavardhan.jpg

இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன், உலக சுகாதார மையத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்பொழுது உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனை இந்திய அரசாங்கம், திறம்படக் கையாண்டு வருகின்றது. இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுபவர் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவதன் ஆவார். ஈஎன்டி அறுவை சிகிச்சை நிபுணரான ஹர்சவர்தனை தான், அடுத்த உலக சுகாதார அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்க உள்ளனர்.

தற்பொழுது பதவியில் இருக்கும் டெட்ரோஸின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், உலக சுகாதாரக் குழுவானது, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து தலைவர்கள் வந்தால் நன்றாக இருக்கும் என விருப்பம் தெரிவித்தது. அதன்படி, டெல்லியில் 34 உறுப்பினர்கள் கூடி நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், ஹர்ஷவர்தன் தான், அடுத்த தலைவர் எனக் கூறப்படுகின்றது.

வருகின்ற மே22ம் தேதி அன்று, அவர் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மொத்தம் மூன்று ஆண்டுகள் உள்ள இந்தப் பதவியில், இந்தியாவின் சார்பில் ஹர்ஷவர்தன் ஒரு வருடம் இருப்பார் எனவும், பின்னர் மற்ற நாட்டினைச் சேர்ந்த தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.

HOT NEWS