இராவணன் இல்லை அது மோடி! மோடி பொம்பையினை எரித்த விவசாயிகள்!

26 October 2020 அரசியல்
modiefigy.jpg

தற்பொழுது இந்தியா முழுக்க தசரா பண்டிகையானது கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், இராவணனுக்கு பதிலாக மோடியின் உருவ பொம்மைக்கு விவசாயிகள் தீயிட்டனர்.

இந்தியாவில் புதியதாக உருவாக்கப்பட்டு உள்ள வேளாண் திருத்த மசோதாவிற்கு, பலரும் தங்களுடைய எதிர்ப்பினைக் காட்டி வருகின்றனர். குறிப்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அங்கு தற்பொழுது தசரா பண்டிகையானது, கொண்டாடப்பட்டு வருகின்றது. எப்பொழுதும் தசரா பண்டிகையின் பொழுது, அவர்கள் இராவணனின் உருவ பொம்மையினை தீயிட்டு எரித்துக் கொண்டாடுவது வழக்கம்.

ஆனால், இந்த முறை வேறொரு பொம்பையினை தீயிட்டு எரித்துள்ளனர். இராவணனின் பொம்மைக்கு பதிலாக, மோடியின் பொம்மையினை தீயிட்டு எரித்துள்ளனர். வைக்கோல் பொம்மையில், மோடியின் புகைப்படத்தினை மாட்டியுள்ளனர். அதனுடன் அமித் ஷா, அம்பானி மற்றும் அதானியின் புகைப்படங்களையும் மாட்டியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அந்தப் பொம்மைகளுக்கு தீயிட்டு எரித்து உள்ளனர். இச்சம்பவம், தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS