கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியினை, ஹரியானாவினைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் போட்டுக் கொண்ட நிலையில், தற்பொழுது அவருக்கு கொரோனா இருப்பதாக கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்ற சூழலில், அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தானது, தற்பொழுது ஆய்விற்காக தன்னார்வலர்கள் மீது பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. அந்த சோதனைக்காக, தன்னுடம்பில் ஹரியானவின் சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் போட்டுக் கொண்டார்.
முதல் டோஸ் கொடுத்த 28 நாட்கள் கழித்து, அவருக்கு 2வது டோஸ் வழங்கப்படும். மொத்தம் 42 நாட்கள் இந்த மருந்தானது எடுத்துக் கொள்ளும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில், முதல் டோஸ் எடுத்துக் கொண்ட அனில் விஜ்ஜிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இது குறித்துப் பேசியுள்ள அனில், மருந்தானது 14 நாட்களுக்குப் பிறகு, முழுமையாக செயல்பட ஆரம்பிக்கும். மேலும் மருந்து எடுத்துக் கொண்ட பிறகு, சமூக இடைவெளியினை பின்பற்றாதக் காரணத்தால், இவ்வாறு நடந்துள்ளது.
என்னுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் தற்பொழுது பரிசோதனை நடைபெற்று வருகின்றது. இந்த மருந்தானது நம்பகத் தன்மை வாய்ந்தது தான் எனக் கூறியுள்ளார்.