லவ் ஜிகாத் செயலுக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும்! ஹரியானா அமைச்சர் அதிரடி!

03 November 2020 அரசியல்
loveafair.jpg

லவ் ஜிகாத் செயலுக்கு எதிராக, மத்திய அரசு கடுமையான சட்டத்தினை இயற்ற வேண்டும் என, ஹரியான உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தியாவில் தற்பொழுது நாளுக்கு நாள், இந்த லவ் ஜிகாத் என்ற செயலுக்கு கடுமையான எதிர்ப்பு உருவாகி வருகின்றது. காதலித்து திருமணம் செய்து கொண்டாலோ அல்லது மதம் மாறி திருணம் செய்து கொண்டாலோ, மணமாகிச் செல்லும் பெண் கணவனின் மதத்திற்கு மாற வேண்டும் என கணவனின் குடும்பத்தினர் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக, இஸ்லாமியர்கள் இந்த செயலில் அதிகம் ஈடுபடுகின்றனர். இதற்கு அலகாபாத் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

திருமணம் செய்து கொள்வதற்கு, மதம் மாற வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறியது. இது குறித்து, உத்திரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், லவ் ஜிகாத் செயலுக்கு எதிராக கட்டாயம் பெரிய அளவிலான சட்டம் தேவை எனக் கூறினார். இதற்கு இந்தியா முழுவதும் தற்பொழுது ஆதரவு அதிகரித்து வருகின்றது.

இதற்கு தற்பொழுது, ஹரியானா மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அனில் விஜி தற்பொழுது தன்னுடையக் கருத்தினை வெளியிட்டு உள்ளார். அவர் பேசுகையில், இந்த லவ் ஜிகாத் என்ற செயலைத் தடுக்கும் பொருட்டு, கடுமையான சட்டம் தேவை. அவ்வாறு செய்தால் தான், இந்து பெண்களின் சுதந்திரமும், கலாச்சாரமும் பாதுகாக்க முடியும் என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS